ஆத்தா மகமாயி... சிஎம் போஸ்ட்டை காப்பாத்து... எடப்பாடிக்காக 'ஜெகஜோர்' யாகம்!
முதல்வர் பதவியை தக்க வைக்க எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினர் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னை: முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அவரது சொந்த ஊரில் சிறப்பு யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் மும்முரமாக உள்ளன. டெல்லி தகவல்களின்படி முதல்வர் பதவி ஓபிஎஸ் வசம் போக இருக்கிறதாம்.

அமைச்சரவை மாற்றம்
இது தொடர்பாக டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரிலும் நெருக்கடி தர இருக்கிறதாம். அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு மாஃபா பாண்டியராஜனை அமைச்சரவையில் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.

செந்தில் பாலாஜி?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தம்முடைய முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள சொந்த ஊரில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

சிறப்பு யாகம்
இதற்கான பொருட்களுடன் சென்னையில் இருந்து சில புரோகிதர்கள் நேற்று இரவு எடப்பாடிக்கு விரைந்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்காக அவரது குடும்பத்தினர் இந்த யாகத்தை நடத்துகின்றனர்.

கோவில் கோவிலாக
ஏற்கனவே சில அமைச்சர்கள் தங்களது கழுத்துக்கு கத்தி வந்துவிடக் கூடாது என கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் சிறப்பு பூஜையும் கூட நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications