மரியாதைக்குரிய பேரறிவாளன் என்று அழைத்த எடப்பாடி பழனிச்சாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேரறிவாளனை மரியாதைக்குரிய பேரறிவாளன் என குறிப்பிட்டு பேசினார்.

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரறிவாளனின் பரோல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறினார்.

Edappadi Palanisamy mentioned Respected Perarivalan in the Assembly

பேரறிவாளனை பரோலில் விடுவிப்பது குறித்து அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். பேரறிவாளன் பரோல் தொடர்பாக சட்டசபை உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசு கவனத்தில்கொள்ளும் என்றும் அவ்ர கூறினார்.

பேரறிவாளன் குறித்து பேசும் போது மரியாதைக்குரிய பேரறிவாளன் என முதல்வர் குறிப்பிட்டார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief Minister Edappadi Palanisamy mentioned Respected Perarivalan, when he was responding about the parole issue. Perarivalan is in jail in the Rajiv murder case.
Please Wait while comments are loading...