For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலை தீர்ப்பு பற்றி எனக்கு தகவல் தெரியாது.. ஜஸ்ட் பேட்டியளித்தேன்.. முதல்வர் திடீர் விளக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடி பழனிச்சாமி பிரஸ் மீட் | அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்- வீடியோ

    சென்னை: இரட்டை இலை தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் தனக்கு வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் விளக்கம் அளித்துள்ளார்.

    பத்திரிகையாளர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பேட்டியளித்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

    v

    சென்னையில் இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற நிகழ்ச்சியில் தான் பங்கேற்றிருந்ததாகவும், அதனால் தனக்கு, இரட்டை இலை சின்ன ஆணை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தனக்கு தெரியாது என்றும், நிருபர்கள் இரட்டை இலை சின்னம் குறித்து நிருபர்கள் கருத்து கேட்டதால் நான் நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்திருந்தேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு விளக்கம் தெரிவிக்கிறது.

    முதல்வர் பதவியில் இருப்பவர்கள் உறுதியான தகவல் இருந்தால்தான் அதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொள்வது மரபு. ஆனால் பத்திரிகையாளர்கள் அளித்த தகவலை வைத்து பேட்டியளித்ததாக முதல்வர் கூறியது மரபுக்கு மாறாக உள்ளது.

    மேலும், தேர்தல் ஆணையம் தீர்ப்பை வெளியிடும் முன்பே முதல்வர் இவ்வாறு பேட்டியளித்ததை பார்த்தால், அவருக்கு தேர்தல் ஆணையர் தனியாக போன் போட்டு தகவல் சொல்லியிருப்பார், பிரதமர் மோடியால்தான் இரட்டை இலை சின்னம் அந்த தரப்புக்கு கிடைத்திருக்கும் என்றெல்லாம் தினகரன் தரப்பின் புகழேந்தி விமர்சனம் செய்திருந்தார்.

    சர்ச்சை எழுந்த காரணத்தால் முதல்வர் இவ்வாறு திடீர் விளக்கம் அளித்துள்ளார் என தெரிகிறது.

    English summary
    CM Edappadi Palanisamy denied that he knew about official two leaf verdict.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X