கரூர் மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியால் அவப்பெயர்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்
கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.
கரூரில் இன்று மாலை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் இதை பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இம்மாவட்ட மக்களுக்கு அவரை பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக பேசுகிறேன்.

அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற இரவு பகலாக பாடுபட்டோம். ஆனால், செந்தில் பாலாஜி எப்படிபட்டவர் என்பதை புரிய வைத்துவிட்டார். கரூர் மாவட்டத்திற்கு அவப்பெயரை செந்தில் பாலாஜி ஏற்படுத்திவிட்டார். செந்தில் பாலாஜி இந்த ஆட்சிக்கே சவால்விடுகிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைக்கிறார்.

தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கும் வரை கட்சி, ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது. நானும், அண்ணனும் (ஓபிஎஸ்) கொண்டுள்ள அரசியல் அனுபவம்தான் செந்தில் பாலாஜியின் வயது. ஒருவர் மறைந்த பிறகும், அவரது நற்செயல்கள்தான் பேசப்படும். ஆனால், செந்தில் பாலாஜி கெட்ட பெயரை ஈட்டிவிட்டார்.
அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்படும், கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பால பணிகளுக்கு ஆய்வு நடத்தப்படும், இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications