ஜெ, சசி மீதான வருமான வரி வழக்கு விசாரணை தொடரும்: எழும்பூர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யவில்லை.

1993-94ம் ஆண்டுக்கான ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமான கணக்கையும் தாக்கல் செய்யவில்லை' என்று ஜெயலலிதா, சசிகலா மீது வருமானவரித் துறையினர் 1996-ம் ஆண்டு எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஜெ. சார்பில் மனு

ஜெ. சார்பில் மனு

இந்நிலையில், ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள், ‘வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததற்கான அபராத தொகையை செலுத்த தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஒரு மனுவை கொடுத்துள்ளோம். இந்த மனு மீது வருமானவரித்துறை இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அதுவரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்' என்று வாதாடினர்.

நேரில் ஆஜராக உத்தரவு

நேரில் ஆஜராக உத்தரவு

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி தட்சணாமூர்த்தி, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை அக்டோபர் 1-ந் தேதி நேரில் ஆஜராகும்படி கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் சார்பில் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது.

நேரில் ஆஜராக விலக்கு

நேரில் ஆஜராக விலக்கு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.பி.கே.வாசுகி, ‘ஜெயலலிதா, சசிகலா 6 வாரங்களுக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், அந்த உத்தரவில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் அபராதத்துடன் அனைத்து கட்டணமும் செலுத்த தயாராக உள்ளதாக வருமான வரித்துறை இயக்குனர் ஜெனரலிடம் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி சமரச மனுக்களை கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை 6 வாரங்களுக்குள் வருமான வரித்துறை பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அக்டோபர் 1ல் விசாரணை

அக்டோபர் 1ல் விசாரணை

இந்த நிலையில் இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் அக்டோபர் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தரப்பு வக்கீல்கள், வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

வருமான வரித்துறை எதிர்ப்பு

வருமான வரித்துறை எதிர்ப்பு

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ராமசாமி, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளிவைக்காமல், விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறினார்.

நேரில் ஆஜராக விலக்கு

நேரில் ஆஜராக விலக்கு

இதையடுத்து இந்த வழக்கை அன்றைய தினம் பிற்பகலுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, ‘சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நேரில் ஆஜராக விலக்கு அளித்துள்ளது. அவர்கள் நேரில் ஆஜரானால்தான் வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியும். அவர்கள் இல்லாமல், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு தொடர உத்தரவு

வழக்கு தொடர உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வருமான வரி வழக்கு விசாரணை தொடர வேண்டும் என வாதிட்டார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது கூட்டாளிகள் சசிகலா உள்ளிட்டோர் மீதான 4 வழக்குகள் விசாரணையும் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். வாதங்களை கேட்ட நீதிபதி தட்சிணாமூர்த்தி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு விசாரணை தொடரும் என்று உத்தரவிட்டார்.

தொடரும் சிக்கல்

தொடரும் சிக்கல்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, ஜாமீனில் வெளியே வந்தாலும், வருமான வரி வழக்கில் நீதிமன்ற படியேறவேண்டும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+