84 வயது பெத்தம்மாள்.. 65 வயது முனியம்மாள்.. களை கட்டிய தூத்துக்குடி பொங்கல் விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே நடந்த பொங்கல் விழாவில் பராம்பாரிய விளையாட்டுகளில் இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வம் காட்டினர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கலை ஓட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம், நகரங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி விளையாட்டி போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பெரியவர்கள், பெண்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இளைஞர்களுக்கு வீர விளையாட்டான இளவட்ட கல் தூக்குதல், பானை உடைத்தல், சடுகுடு போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இதில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் இளவட்ட கல் தூக்க ஆர்வம் காட்டியது அங்கிருப்போரை ஆச்சரியப்படுத்தியது.

இந்த கல் எடை சுமார் 100 கிலோவுக்கு குறையாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இளம்பெண்களும் கலந்து கொண்டு மல்லு கட்டியது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகப்படுத்தியது. அவர்களை முதிய பெண்கள் உற்சாகப்படுத்தினர்.
இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட கபடி போட்டியும் நடத்தப்பட்டது. மேலும் இளம்பெண்களுக்கு பாண்டி ஆட்டம், சங்கா, தவிடா, திருவை திரித்தல், ஓட்டப்பந்தம், குலை குலையா முந்தரிக்காய் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
திருவை திருத்தல் போட்டியில் 84 வயதான பெத்தமாள், 65 வயதான முனியம்மாள் என்ற பாட்டிகளும் கலந்து கொண்டு பார்வையாளர்களை மெய்சிலிரிக்க வைத்தனர். பாண்டி விளையாட்டில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டினர்.
காலை முதல் தொடங்கிய வி்ளையாட்டி மாலை வரை தொடர்ந்து நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பழமையை மறக்காமல் இருப்பது தென் மாவட்ட மக்களை உற்சாகத்தில் வைத்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications