சென்னை தலைமை செயலகத்தில் நாளை தேர்தல் ஆணையம் கூட்டும் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டம்!
சென்னை: தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் நாளை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக அண்மையில் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றார். இதனையடுத்து டெல்லியில் அனைத்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ஞானேஷ் குமார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஞானேஷ்குமார், அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ), வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இஆர்ஓ), வட்டாரநிலையிலான அதிகாரிகள் (பிஎல்ஓ) உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றவும், அனைத்து சட்டப்பூர்வக் கடமைகளையும் அதாவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 & 1951; வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள் 1961 மற்றும் அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை உறுதியுடன் நிறைவேற்றவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பதிவு அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு ஏப்ரல் 30-ந் தேதிக்குள் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடமிருந்து பரிந்துரைகளைத் தேர்தல் ஆணையம் கோரியிருந்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிய தனிப்பட்ட கடிதத்தில், நிறுவப்பட்ட சட்டத்திற்கு ஏற்ப தேர்தல் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, பரஸ்பரம் வசதியான தருணத்தில், கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக தெரிவித்திருந்த இந்திய தேர்தல் ஆணையம், அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 23(4), 23(5) மற்றும் 23(6) ஆகியவற்றின் விதிகளின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த பின்னணியில் சென்னையில் நாளை அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம்












Click it and Unblock the Notifications