ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார்.. ஆனால்..: தேர்தல் ஆணையம்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 நகர பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சிகளின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில் அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, உரிய கால அவகாசம் வழங்காமல் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரபபட்டது.
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள், மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் உத்தரவிட்டது. அப்போது அதிகாரிகளின் உள்ளாட்சி தேர்தல் குறித்து பயிற்சி வழங்க வேண்டியுள்ளதால், மே 15-ஆம் தேதிக்குள் நடத்துவதாக தமிழக தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
உள்ளாட்சி தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று பாடம் நாராயணன்
சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கு மீது நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், டீக்கா ராமன் ஆகியோர் இன்று விசாரணை நடத்தினர்.
அப்போது மாநில தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகரன் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் ககூறுகையில், ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அறிய சட்டம் இயற்ற வேண்டும், சுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தமிழக அரசின் ஏற்பாட்டுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளது அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் குமார் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிபோகும் நிலை ஏற்படலாம் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications