தமிழக சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதாக பரவிவரும் செய்தி பொய்யானது... ராஜேஷ் லக்கானி
சென்னை: தமிழக சட்டசபைக்கு ஏப். 24, மே 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதில் உண்மையில்லை. தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெறும் என நேற்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது; அதன் பின்னர் மே 8-ந் தேதி தேர்தல் நடைபெறும் என மற்றொரு செய்தி பரவியது.
இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தமிழகத்தில் 14-வது சட்டசபையின் பதவிக்காலம், 2016-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி இறுதி செய்யப்படாத நிலையில், ஏப். 24-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம்.
தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டவுடன் முறைப்படி அறிவிக்கப்படும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை, தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்காக, 75 ஆயிரம் கன்ட்ரோல் யூனிட் மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, பீஹார், குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து எடுத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அந்த இயந்திரங்கள் விரைவில் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும். ஜனவரி மாதம் இறுதியில், தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வர இருக்கிறார்.
தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந் தேதி வெளியிடப்படும்.'வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு, இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 28-ந் தேதி வரை நடைபெறும். அதுவரை விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் வழங்கப்படும்.
இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications