பிரபல ரவுடி ராஜாவை என்கவுண்டரில் போட போலீஸ் திட்டம்?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜாவை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜா. அவருக்கும் மற்றொரு ரவுடியான மகாலிங்கத்திற்கும் இடையே பகையாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மகாலிங்கம் முன்னாள் ரவுடியும், கல்வி அதிபருமான ஜி. ரவியை கொலை செய்ய முயன்றார். அப்போது அவர் ரவியின் மகன், அவரது ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டார்.

Encounter waiting for Rowdy Raja?

இதையடுத்து வேலூரில் ராஜாவின் கை ஓங்கி அவர் அட்டகாசம் செய்து வந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ராஜா தலைமறைவாகிவிட்டார்.

ராஜா தலைமறைவான பிறகு அவரது ஆட்கள் வேலூரில் அடாவடி செய்யத் துவங்கினர். இந்நிலையில் வாலாஜா அருகே உள்ள ராஜாவின் தாயின் சொந்த ஊரில் நிலத் தகராறாக இருந்தது. இதை ராஜாவின் அம்மா தரப்பு ஆட்கள் அவரிடம் தெரிவித்த் நிலையில் தகராறு செய்த ராமச்சந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொலையை ராஜா தான் செய்தார் என்று கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து அவரை தேடினர். இந்நிலையில் ராஜா சிக்கிவிட்டார். அவரை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள போலீசார் மேலிடத்தில் அனுமதி கேட்க இன்னும் பதில் இல்லையாம்.

பதில் வராததால் ராஜா இன்னும் சிக்கவில்லை என கூறப்படுவதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+