கோவை அருகே காம்பவுண்ட் சுவற்றில் கார் மோதி 4 பேர் சாவு
கோவை: கோவை அருகே காம்பவுண்ட் சுவற்றில் கார் மோதியதில் பார்முலா-4 வீரர்கள், இன்ஜினியரிங் மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
கோவை புறநகர் பகுதியில் போத்தனூர்-செட்டிப்பாளையம் சாலையில் இன்று காலை காம்பவுண்ட் சுவற்றில் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கோவை சுந்தரபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த பிரதீப் (21), நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சனத்குமார் (22), குனியமுத்தூர் பிகேபுதூரை சேர்ந்த சாமிநாதன் (35) மற்றும் சரவணகுமார் (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சனத்குமார் குனியமுத்தூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு பி.இ. படித்து வந்தார். சாமிநாதன் மற்றும் சரவணகுமார் ரேஸ் கார் மெக்கானிக்காக வேலை பார்த்துவந்தனர். பிரதீப் பி.இ படிப்பை இந்தாண்டுதான் முடித்திருந்தார். சம்பவம் நடந்த போது காரை பிரதீப்தான் ஓட்டிச் சென்றுள்ளார். சனத்குமாரும், பிரதீப்பும் பார்முலா-4 வகை கார் பந்தைய வீரரர்கள் என்று கூறப்படுகிறது.
செட்டிப்பாளையத்தில் இன்று நடைபெறும் பார்முலா-4 கார் பந்தையத்தில் பங்கேற்க அதிவேகமாக சென்றபோது விபத்தில் சிக்கி 4பேரும் பலியாகியுள்ளனர். காரில் பயணித்த சக நண்பர் தீபக் மட்டும் படுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications