Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணப்பெண்ணால் கைவிடப்பட்ட ஈரோடு அதிமுக எம்எல்ஏ ஹேப்பி அண்ணாச்சி.. அடுத்த பெண் கிடைத்தார்!

அதிமுக எம்எல்ஏவுக்கு வேறு பெண்ணை பார்த்து குறித்த முகூர்த்தத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நிச்சயித்த பெண் மாயம்...அதிமுக எம்எல்ஏ-க்கு இன்னொரு பெண் கிடைத்து விட்டார்- வீடியோ

    ஈரோடு: நிச்சயித்த பெண் மாயமாகிவிட்டதால், ஏற்கனவே குறித்த அதே முகூர்த்தத்தில் தனது திருமணம் நடைபெறும் என்று எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஈஸ்வரன். வயது 43. இவருக்கு சந்தியா என்ற 23 வயது பெண்ணை பார்த்து திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

    வருகிற 12-ந் தேதி சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலிலேயே திருமணத்தை நடத்திடலாம் எனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்காக இரு வீட்டாரும் பத்திரிகைகளை ஊர்முழுக்க கொடுத்து வந்தனர்.

    முதலமைச்சர் பங்கேற்பு

    முதலமைச்சர் பங்கேற்பு

    அது மட்டுமல்லாமல், இந்த திருமணத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் என அனைவருமே கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது.

    தாயார் புகார்

    தாயார் புகார்

    இந்த நிலையில் மணப்பெண் சந்தியா கடந்த 1-ம் தேதியிலிருந்து மாயமானார். இதனால் இரு தரப்பு வீட்டினருமே அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சந்தியாவின் தாயார் காவல்நிலையத்தில், தன் மகளை காணவில்லை என்றும், அவர் ஒருவரைக் காதலித்து வந்ததால், அவர் மீது தனக்கு சந்தேகமாக இருப்பதாகவும், எனவே மகளை கண்டுபிடித்து தாருங்கள் என்றும் புகார் அளித்திருந்தார்.

    திருமண பத்திரிகை

    திருமண பத்திரிகை

    எம்எல்ஏவுக்கு நிச்சயித்த பெண் காணாமல் போய்விட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்புக்கு உள்ளானது. எம்எல்ஏவின் திருமணத்திற்காக மறைந்த ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படங்களுடன் அச்சிடப்பட்ட கல்யாண பத்திரிகைகள் கூட ஊடகங்களில் நேற்று வெளியானது.

    குறித்த முகூர்த்தம்

    குறித்த முகூர்த்தம்

    இந்நிலையில், ஏற்கனவே குறித்த தேதியில் திருமணத்தை நடத்த எம்எல்ஏ தரப்பில் ஏற்பாடுகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டது. எம்எல்ஏவிற்கு அவரது சமூகத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை பார்க்க தொடங்கினர். அதன்படி சத்தியமங்கலத்திலேயே பெண்ணையும் பார்த்து திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளனர். அதனால் ஏற்கனவே குறித்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும் என்று எம். எல்.ஏ. உறுதி கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+