கிருஷ்ணகிரி: ஜிஞ்சுப்பள்ளி எருதாட்டம் - ஜோலார்பேட்டை காளைக்கு 12 கிராம் தங்க நாணயம் பரிசு
கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜிஞ்சுப்பள்ளியில் 2ம் ஆண்டு எருதாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி: ஜிஞ்சுப்பள்ளியில் நடைபெற்ற எருதாட்டத்தில், முதலிடத்தை பிடித்த ஜோலார்பேட்டை காளைக்கு 12 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த ஜிஞ்சுப்பள்ளி கிராமத்தில், இரண்டாம் ஆண்டு எருதாட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விட்டனர்.

கூட்டத்தை கண்டு மிரண்டு காளைகள் ஓட்டம் பிடித்தன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை கடந்து ஓடும் காளைகளின் தூரம் கணக்கிடப்பட்டு, காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக 12 கிராம் தங்க நாணயத்தை, ஜோலார்பேட்டை மின்னல் என்பவர் தட்டிச் சென்றார்.
இரண்டாம் பரிசான 10 கிராம் தங்க நாணயம் எலத்தகிரி பாஷா என்பவருக்கும், மூன்றாம் பரிசான 8 கிராம் தங்க நாணயம் காளிங்காவரம் தக்காளி முனுசாமிக்கும் கிடைத்தது. மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு 32 இன்ச் எல்இடி டிவி, பிரிட்ஜ், பீரோ மற்றும் ஏர்கூலர், சைக்கிள், வெள்ளி காமாட்சி விளக்கு என மொத்தம் 27 பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவினை கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் வந்திருந்து கண்டுகளித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications