நடிகர்கள் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜை தொடர்ந்து “இந்து தீவிரவாதம்” சர்ச்சையில் அரவிந்த் சுவாமி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்து தீவிரவாதம் குறித்த கமல் கருத்து.. பாஜக, சிவசேனை கடும் எதிர்ப்பு!- வீடியோ

சென்னை: அரசியல் நோக்கங்களுக்குகாக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தீவிரவாதம் தான் என நடிகர் அரவிந்த் சுவாமி தெரிவித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது.

இந்து தீவிரவாதம் இல்லை என்று இந்துக்களே கூற முடியாது என நடிகர் கமல்ஹாசன், வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார் நடிகர் கமல்ஹாசனுக்கு மனநிலை சரியில்லை என தெரிவித்திருந்தார்.

பாஜக தேசிய செயலாளர் எச் ராஜாவும் நடிகர் கமல்ஹாசனை தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விளாசியிருந்தார்.

 பிரகாஷ் ராஜ் ஆதரவு

பிரகாஷ் ராஜ் ஆதரவு

நடிகர் கமல்ஹாசனின் சர்ச்சை கருத்து தொடர்பாக உத்தரப்பிரதேசத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நடிகர் கமல்ஹாசனின் பேச்சுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

 எது தீவிரவாதம்?

எது தீவிரவாதம்?

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சுவாமியும் இந்து தீவிரவாத சர்ச்சை குறித்து வாய்திறந்துள்ளார். இதுதொடர்பாக அரவிந்த் சுவாமி பதிவிட்டுள்ள டிவிட்டரில் எது தீவிரவாதம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் சுவாமி விளக்கம்

அதாவது, சட்டவிரோத வன்முறை மற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஒரு நபரை, குறிப்பாக பொது மக்களுக்கு எதிராக, அரசியல் நோக்கங்களுக்கான அச்சுறுத்தல் தான் தீவிரவாதம் என அரவிந்த் சுவாமி தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 கமலுக்கும் ஆதரவு

கமலுக்கும் ஆதரவு

ஏற்கனவே மெர்சல் பட விவகாரத்தில் பாஜக பிரச்சனை எழுப்பிய போது படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் அரவிந்த் சுவாமி. தற்போது இந்து தீவிரவாதம் குறித்து கமல் பேசியதற்கும் அவர் ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
It's not just actor Kamal Haasan who has been vocal about political issues in recent times. His colleagues from the film industry, actors Arvind Swami and Prakash Raj, have also been tweeting their views about different issues for a while.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற