For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூச்சுக் குழல் பிரச்சனையால் அவதிப்படும் 1 வயது குழந்தை.. உதவிக்கரம் நீட்டுங்கள்!

3 அறுவை சிகிச்சைக்கு பிறகு கூட தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் தன்யஸ்ரீ என்ற ஒரு வயது குழந்தையை காப்பாற்ற உதவுங்கள்.

சென்னை: 3 அறுவை சிகிச்சைக்கு பிறகு கூட தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கும் தன்யஸ்ரீ என்ற ஒரு வயது குழந்தையை காப்பாற்ற உதவுங்கள்.

தன்யஸ்ரீ. பேருக்கு ஏற்ற மாதிரி அழகான ஒரு குழந்தை. எல்லாரும் பார்த்த உடன் தூக்கி கொஞ்ச தூண்டும் அளவுக்கு ஈர்ப்பு. ஆனால் சில மாதங்களாகவே எங்கு பார்த்தாலும் டியூட்டுடனும், சுத்தி எலக்ட்ரானிக் கருவிகளுடன் அவளை படுத்த படுக்கையில் பார்க்கும் போது என் நெஞ்சம் கனக்கிறது. கண்ணீர் விட்டு கூட பல நேரங்களில் நான் அழுது விடுவது உண்டு.

Even after 3 surgeries, this 1-year-old struggles for each breath

அவளுடன் விளையாண்டால் போதும் எனக்கு நேரம் போவதே தெரியாது. ரொம்பவும் துடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் விளையாடுவாள். இப்பொழுது அவள் இல்லாமல் என் வீடே வெறிச்சோடி இருக்கிறது. அவள் இல்லாத ஒவ்வொரு நாளும் ரணமாக கழிகிறது. இதுவரை அவளுடைய சிரிப்பு, மெளனத்தை பார்த்த நான் இப்பொழுது அவளது அழுகை தான் பார்க்கிறேன். அப்படியே வேதனையால் துடித்து போகிறாள். அவள் எனக்கு வேணும்; சந்தோஷமாக வேணும் என்று ஒவ்வொரு நாளும் நான் காத்திருக்கிறேன் என்று விஸ்வபிரியா கூறுகிறார்.

5 மாதங்கள் படுத்த படுக்கையிலே இருக்கிறாள் தன்யஸ்ரீ. விஸ்வபிரியா 3 வருஷங்கள் போராடிய பிறகு தான் தன்யஸ்ரீயை முதன் முதலாக கருவுற்றாள். ஏகப்பட்ட கனவுகளும் ஏக்கத்துடனும் அவளின் பிறப்பை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தனர். விஸ்வப்பிரியாவுக்கு இப்பொழுது 34 வயதாகிறது. கடவுளின் அருளால் தான் தன்யஸ்ரீ எனக்கு கிடைத்தாள். நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். ஒரு தாயாக ஆகுவதை நினைத்து பூரித்து இருந்தேன்.

Even after 3 surgeries, this 1-year-old struggles for each breath

ஆனால் இந்த சந்தோஷத்தை முழுதாக அனுபவிப்பதற்குள் என் வாழ்வில் பேரிடி விழுந்தது போல அந்த சம்பவம் நடந்தது. இன்னமும் அந்த கஷ்டம் என் நினைவில் நிற்கிறது. உங்கள் குழந்தைக்கு மூச்சு வால்வு சிதைவு உள்ளது என்று மருத்துவர்கள் சொன்ன அந்த நிமிஷத்தை நினைத்து இன்னமும் நான் அழுது கொண்டு இருக்கிறேன். அவர்கள் கூறிய மருத்துவ வார்த்தைகள் எதுவும் எனக்கு புரியவில்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் என் மகளை எப்படியாவது காப்பாற்றி கொடுத்திடனும் என்பது மட்டும் தான்.

7 மாதம் வரை தன்ய ஸ்ரீக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மற்ற குழந்தையை போலவே ரெம்பவும் துறுதுறுவென விளையாடுவாள். ஒரு நாள் தன்ய ஸ்ரீ தொடர்ச்சியாக வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். கூடவே மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக என் குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். என் கணவரும் என்னுடன் வந்தார். அவளை உடனடியாக சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தோம்.

எங்கள் திருப்பூர் ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. மருத்துவர்கள் அவளை பார்க்கும் வரை நான் அழுது கொண்டே தான் இருந்தேன். அவள் வேதனையால் துடிப்பதை என்னால் தாங்கவே முடியவில்லை. அவளை எப்பொழுதும் என் மார்போடு அணைத்து கட்டிக் கொள்வேன். உனக்கு ஒன்னும் செய்யாது கண்ணு என்று சொல்வேன். ஆனால் இன்று வரை போராடியும் அவளின் நிலைமை மோசமாகவே உள்ளது. அவள் இன்னும் மருத்துவ மனையில் இருந்து தவித்து வருகிறாள். என் குழந்தையை காப்பாற்ற எனக்கு உதவுங்கள். அவள் தான் எனது உலகம்.

Even after 3 surgeries, this 1-year-old struggles for each breath

தன்ய ஸ்ரீ மூச்சுக் குழல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறாள். அவளால் இயல்பாக சுவாசிக்க கூட முடியாது. 7 மாத குழந்தையாக இருந்தாலும் அவளுக்கு சிறிய சிறிய அறுவை சிகிச்சைகள் முதலில் செய்ய வேண்டும் என்றனர் மருத்துவர்கள். அதை எப்படி அவள் தாங்குவாள், அதன் வேதனை எப்படி இருக்கும் என்பதை நினைக்கும் போதே என்னால் தாங்க முடியவில்லை என்கிறார் விஸ்வபிரியா முதல் இரண்டு மாதங்கள் முழுவதும் அவளை ஐ. சி. யூ வில் வைத்தனர்.

இரண்டு அபாயகரமான அறுவை சிகிச்சைகள் அவளுக்கு மேற்கொள்ளப்பட்டது. அவளுக்கு தற்போது வரை மூன்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் அவள் மோசமான நிலையில் தான் இருக்கிறாள்.

தன்ய ஸ்ரீ சிகிச்சைகாக நாங்கள் 15-20 லட்சம் வரை செலவழித்துள்ளோம். எங்களுக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து உதவியை பெற்றோம். நான் ஒரு தனியார் தொழிலில் இருந்து வந்தேன். இப்பொழுது தன்ய ஸ்ரீ பார்த்துக் கொள்ள என் வேலையையும் விட வேண்டியதாச்சு. எனது கணவர் ஒரு தையல்காரர், மாதம் 3000 ரூபாய் வரை தான் வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு கூட போதுமானதாக இருக்காது. ஏன் சில சமயம் இரவு ஒரு வேளை உணவு மட்டும் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்வோம்.

Even after 3 surgeries, this 1-year-old struggles for each breath

அவளுக்கு எப்பொழுதும் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறாள். அவள் இன்னும் இரண்டு மாதங்கள் மருத்துவ மனையில் இருக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இன்னமும் அவள் சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.

இந்த குடும்பத்தால் 5 லட்சம் ரூபாயை செலுத்த முடியாது என்பதால் நம்மிடம் உதவி நாடி வந்துள்ளனர். உங்களால் முடிந்த உதவியை செய்து ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவுங்கள். உங்களின் ஒரு சிறு உதவி ஒரு தாயின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும். உயிர் காக்க உதவி செய்வோம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X