எம்.எல்.ஏக்களை மிரட்டி ஆதரவு கடிதம் வாங்குவதா? ஈ.வி.கே.எஸ். குற்றச்சாட்டு
அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்தையோ, எடப்பாடி பழனிச்சாமியையோ ஆதரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் சிறைவைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. எப்படியும் முதல்வர் பதவியை கைப்பற்றி விடலாம் என நினைத்த சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாதகமாக அமைந்தது. இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. இதையடுத்து சசிகலாவின் விசுவாசியான எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுத்து முதல்வராக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இதனிடையே எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று சசிகலா தரப்பு அதிமுகவினரும், மிரட்டி கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் மிரட்டி ஆதரவு கடிதம் பெறப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னும் அதிமுக சசிகலா பிடியில் தான் உள்ளது. அவரது பிடியில் இருக்கும் வரை அதிமுகவை மக்கள் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சசிகலாவுக்கும் ஆதரவு இல்லை, ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஆதரவு இல்லை. திமுகவின் நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரஸ் முடிவை அறிவிக்கும் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications