Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த முதல்வர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. அடித்துச் சொல்லும் குஷ்பு: காங்கிரசார் ஷாக்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: வருஷம் 16 படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள குஷ்பு, தான் பேசும் மேடைகளில் எல்லாம் 2016ல் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் என்றும் முதல்வராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அமர்வார் என்றும் கூறி காங்கிரஸ் கட்சியினருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க... அரசியல் கட்சியினர் ஆள் ஆளுக்கு கூட்டம் போட்டு கூவி வருகின்றனர். எல்லாம் ஓட்டுக்குத்தான் என்றாலும் சொல்வதற்கு ஒரு நியாயம் வேண்டாமா? எல்லாரையும் போல நாங்களும் தெறிக்க விடுவோம்ல... நாங்க காங்கிரஸ் எங்க தயவு இல்லாம யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறி வருகிறார் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.

தருமபுரியில் பேசிய குஷ்பு இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தமிழக முதல்வர் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம் அதைக்கேட்டு மேடையில் இருந்த காங்கிரசார் மட்டுமல்ல ஈவிகேஎஸ் இளங்கோவனே கூட ஷாக் ஆகித்தான் போகிறார்.

இப்போது ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பேசிய குஷ்பு, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்தை தமிழக மக்கள் தருவார்கள். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறந்து உள்ளது. தமிழ்நாட்டிலும் மத்தியிலும் காங்கிரஸ் விரைவில் ஆட்சியை பிடிக்கும் என்று கூறி உற்சாகப்படுத்தயுள்ளார்.

மருமகள் சென்டிமெண்ட்

மருமகள் சென்டிமெண்ட்

நான் கோபி செட்டிபாளையத்திற்கு சினிமா படப்பிடிப்பிற்காக பல முறை வந்திருக்கிறேன். இதனால் சொந்த வீட்டுக்கு வந்தது போன்ற உணர்வு தான் எனக்கு உள்ளது. நான் காங்கிரஸ் தொண்டராக மட்டுமல்ல, உங்கள் வீட்டு மருமகளாக, மகளாக வந்துள்ளேன் என்று பெர்சனல் டச் வைத்தார் குஷ்பு.

அரசியல் அட்டாக்

அரசியல் அட்டாக்

அடுத்ததாக அரசியல் டச் கொடுத்த குஷ்பு, தமிழ்நாட்டின் நிலைமை இப்போது எப்படி உள்ளது? என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இலவசம், இலவசம், என்று கொடுக்கிறார்களே இந்த இலவசத்துக்கு பதிலாக கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றை இந்த அரசு கொடுத்திருந்தால் ஜெயலலிதா புத்திசாலியாக இருந்திருப்பார் என்றார்.

வெள்ள நிவாரணம்

வெள்ள நிவாரணம்

இலவச பொருட்களை கொடுத்து மக்களை அடிமையாக்கி விட்டார் ஜெயலலிதா. சென்னை உள்பட 4 மாவட்ட மழைவெள்ளத்துக்கு நிவாரணமாக 1,000 கோடியை மத்திய அரசு நிவாரணமாக கொடுத்துள்ளது. அது மக்களுக்கு போய் சேருமா?

ஊழல் பட்டியல்

ஊழல் பட்டியல்

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு தமிழக அரசு பதில் சொல்கிறதா? அதிமுக ஆட்சி பற்றி ஊழல் பட்டியல் வெளியிட்டோம். அதற்கு இதுவரை பதில் இல்லை. எங்கள் மீது வழக்கு போட தயாரா? நாங்கள் சந்திக்க தயாராக உள்ளோம்.

கேரளா போல மதுவிலக்கு

கேரளா போல மதுவிலக்கு

கேரளாவில் காங்கிரஸ் அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது போல் தமிழகத்திலும் இந்த அரசால் மது விலக்கை கொண்டு வர முடியுமா? பொதுமக்களும் இந்த கேள்வியை கேட்க தயாராகி விட்டனர்.

ஆட்சியை பிடிப்போம்

ஆட்சியை பிடிப்போம்

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்தை தமிழக மக்கள் தருவார்கள். தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறந்து உள்ளது. தமிழ்நாட்டிலும் மத்தியிலும் காங்கிரஸ் விரைவில் ஆட்சியை பிடிக்கும்.

உயர்தியாகம் செய்தவர்கள்

உயர்தியாகம் செய்தவர்கள்

காங்கிரஸ்காரர்கள் நாடு சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தனர். ஆனால் பாஜக கட்சியினர் நாட்டுக்காக யாராவது உயிர்த்தியாகம் செய்துள்ளார்களா? என்று அனல் பறக்க பேசிவிட்டு அமர்ந்தார் குஷ்பு.

நல்ல வேளையாக இங்கேயும் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதல்வர் என்று கூறவில்லை குஷ்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+