திருவள்ளூர் அருகே விஷம் குடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!
திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதில் மூவர் பலியாகி உள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஐயர்கண்டிகை கிராமத்தில் சாலையோர உணவுக்கடை நடத்தி வந்தவர் செல்வம், இவரது மனைவி ஜெயந்தி, மகள்கள் மகாலட்சுமி, மோனிஷா, தாய் வள்ளியம்மாளோடு வசித்து வந்தார்.

கடையை மூடிவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்த செல்வம், விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சி மருந்தினை கடையிலிருந்து வாங்கி வந்து அனைவருக்கும் பாலில் கலந்து கொடுத்துள்ளார். விஷம் குடித்த பிறகு வலி பொறுக்காமல் பெரிய மகள் மகாலட்சுமி, அருகில் இருக்கும் தனது சித்தி வீட்டிற்க்கு போன் செய்து வீட்டில் நடந்தவற்றை அழுது கூறி இருக்கிறார்.
இதனையடுத்து அங்கு வந்த உறவினர்களை கதவை உடைத்து, மயங்கிய நிலையில் இருந்த 5 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிகிச்சை பலனின்றி தாய் வள்ளியம்மாள் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து செல்வமும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.
மிகவும் ஆபத்தான நிலையில் மகாலட்சுமி மற்றும் மோனிஷா ஆகியோர் திவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் தற்கொலை முயற்சிக்கு குடும்பத் தகராறு காரணமா அல்லது கடன் தொல்லையா வேறு ஏதேனும் காரணமா என கவரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications