மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய விவசாய சங்கத்தினர் 241 பேர் கைது
நாகை: வேதாரண்யத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய 4 பெண்கள் உள்பட 241 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வேதரத்தினம் உள்ளிட்ட 18 வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வேதாரண்யத்தில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த அமைப்பினர் திருத்துறைப்பூண்டி அருகே வந்தபோது போலீஸார் வேதாரண்யம் செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர், அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருத்துறைப்பூண்டி காமராசர் சிலை அருகே கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தரசு, காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.கண்ணதாசன் உள்ளிட்ட போலீஸார், பி.ஆர்.பாண்டியன், மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் 42 பெண்கள் உள்ளிட்ட 241 பேரை கைது செய்தனர்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications