காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்.. காவிரி விவகாரத்தில் விவசாயிகள் வேதனை
காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என விவசாயிகள் காவிரி விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை: காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்டதற்கு சமம் என விவசாயிகள் காவிரி விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
காவிரி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காவிரி வழக்கில் விளக்க மனு தாக்கல் செய்ய தலைமை வழக்கறிஞர் அனுமதியளித்துள்ளார்.
மேலாண்மை வாரியம் அமைக்க நாளை கெடு முடியும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள செயல்திட்டம் என்ன என்பதை விளக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

காவிரி விவகாரத்தில் கடைசி நேரத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்க முடிவு செய்திருப்பதற்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு வஞ்சகம் செய்வதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி வாரியம் அமைக்காமல் இழுத்தடிக்கும் முயற்சி தான் மத்திய அரசின் முடிவு என அவர் கூறியுள்ளார். 6 வாரக்காலம் அவகாசம் அளித்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு காலம் தாழ்த்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்றார். மேலாண்மை வாரியம் அமைப்பதை தட்டிக்கழிக்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications