குறைந்துவரும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் : நெல்லை விவசாயிகள் கவலை
வடகிழக்குப் பருவமழை குறைந்துபோனதால் நெல்லை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை :வடகிழக்கு பருவமழை திடீரென காணாமல் போனதால் அதனை பெருமளவில் நம்பி இருந்த நெல்லை விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் தேவையை பாபநாசம் அணை நிறைவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்த நிலையில் இந்தாண்டு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் நல்ல மழையை கொடுத்தது.

இந்த மழையின் மூலம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை தாண்டியது. கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 103 அடியை தொட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக அணை பகுதியில் மழை இல்லை. இந்நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 99.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 89.55 அடியாக உள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணை பகுதியில் மழை இல்லை. இருப்பினும் கருப்பா நதியில் 15மிமீ, அடவி நயினார் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருமழையைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை நீடிக்கும். அந்த கால கட்டத்தில் தான் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்புவது வழக்கம். கடந்தாண்டு வடகிழக்கு பருமழை கைவிட்டாலும் இந்தாண்டு தொடக்கத்திலேயே மழை பெய்த போதிலும் அது தொடரவில்லை என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications