பெரியார் மண்ணில் பாசிச கட்சிகள் காலூன்றமுடியாது! கோவில்பட்டி அடி யோகிக்கு வலிக்கும்: நாஞ்சில் சம்பத்
கோவில்பட்டி: பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலூன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உள்ளாட்சி தேர்தல் என்பது நாற்றங்கால் அந்த நாற்றங்களை ஒரு கூட்டம் தேர்தலை நடத்தாமலே காலம் கடத்தி சென்றது. உள்ளாட்சி பகுதிகளுக்கு பல்பு வாங்கியதில் 1500 ரூபாய் என கோடி கோடியாய் கொள்ளையடித்த கோவையை சார்ந்த வேலுமணி என்று நாஞ்சில் சம்பத் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்து வருகிறார்.

நாஞ்சில் சம்பத்
பிரச்சாரத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், ''தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 6000 கோடி ஊழல் செய்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி. வீட்டு வாசலிலே 70 லட்ச ரூபாய் மணலை குவித்து வைத்து கொள்ளை அடித்த வீரமணி என தற்போது இந்த மணிகளின் ஆட்சி முடிவு வந்துள்ளது.

ராஜதந்திரம்
இன்றைக்கு அவர்களை பயன்படுத்தி கொண்டு எல்லா இடங்களிலும் செய்கின்ற ராஜதந்திர அரசியலை தமிழகத்திலும் செய்ய முயற்சிக்கின்றனர். எந்த கட்சி வலுவாக உள்ளதோ அந்த கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு அந்த கட்சியை தனதாக்கிக் கொள்கிற கபளீகரம் அரசியலை முன்னெடுத்து வருகின்ற காலகட்டத்தில் எங்கே வேண்டுமென்றாலும் காலூன்றலாம் கடை நடத்தலாம்.

காலூன்ற முடியாது
இந்த பாசிச கட்சிகள் ஒருபோதும்பெரியார் அண்ணா பூமியில் காலூன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது. இதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கடமை எங்களுக்கும் எங்கள் முன்னால் உள்ள மக்களுக்கும் அதை உணர்த்த வேண்டிய உரிமை உள்ளது. பாசிஸ்டுகளின் உடைய பழிக்கு நீங்களும் நானும் பலிகேடாக ஆகாமல் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

காப்பாற்ற வேண்டும்
எல்லா புது துறை சொத்துக்களையும் சூறையாடி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இயல்பையே பாலாக்கி இந்தியாவின் மிக குறைந்த விலைக்கு விற்ககூடிய கூட்டத்தின் பிடியிலிருந்து தேசத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கோவில்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற செய்தி கேட்டால் கோவில்பட்டியில் அடிக்கிற அடி லக்னோவில் இருக்கிற ஆதித்யநாத் கன்னத்தில் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின்
''தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு பல்லக்கில் கடந்து தமிழகத்தை சமவெளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி என்னும் எட்டு வழி சாலை பேர்வழியை இந்த நாட்டிலே யார் என்று தெரியாத ஒரு அரசியல் அனாதையை சசிகலா முடிசூட்டி பார்த்து அந்த சசிகலாவுக்கு துரோகம் செய்து அருந்தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு உரிமையை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்தார்கள். எனவே உங்களது வாக்குகள் பாறையில் விதைத்து பலனின்றி போகாமல் வாக்கு அளிக்க வேண்டிய சின்னம் உதய சூரியன்'' என்று கூறி வாக்கு சேகரித்தார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications