சித்தப்பாவுடன் கள்ளக்காதல்.. மகளை கண்டித்தும் சென்னையில் குடித்தனம்.. வேதனையில் தந்தை தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் கள்ளக்காதலால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நாரியப்பனூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சரண்யா. நர்சிங் படித்துள்ள இவர், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவருடைய சித்தப்பா மணிகண்டன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த சரண்யாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

தவறு

தவறு

"அவர் உனக்கு சித்தப்பா முறை வேண்டும். இது தவறு" என்று உறவினர்களும் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் கள்ளக்காதலனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுவிட்டார். இது குறித்து சரண்யாவின் குடும்பத்தினர் வரஞ்சரம் காவல்நிலையத்தில் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளனர்.

நடவடிக்கை

நடவடிக்கை

எனினும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் அதற்கு மாறாக சரண்யாவின் குடும்பத்தார் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இதுபற்றி அறிந்த மணிகண்டனின் மனைவி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

சரண்யா

சரண்யா

அதன் பேரில் போலீசார் சரண்யாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து சரண்யா தனது அத்தை வீட்டில் தங்கிய நிலையில் தன்னை மணிகண்டன் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்றதாகவும், அவருக்கு ஏற்கெனவே ஒரு மனைவி உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மனவேதனை

மனவேதனை

இதற்கிடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டனுடன், சரண்யா மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது தெரிகிறது. மணிகண்டனுடன் தனது மகள் சரண்யா சென்றதால் முருகேசன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். மணிகண்டன், தான் சரண்யாவுடன் எடுத்த புகைப்படங்களை முருகேசனுக்கு அனுப்பி வைத்தும் தொலைபேசியில் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளில் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது.

முருகேசன் தற்கொலை

முருகேசன் தற்கொலை

இதனால் முருகேசனின் மனவேதனை அதிகமானதையடுத்து மனமுடைந்த முருகேசன் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கண்ணீர்

கண்ணீர்

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகாத உறவால் கள்ளக்காதலுடன் ஓடிய மகளால் மனவேதனை அடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரண்யாவின் தந்தை முருகேசன், மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று முருகேசன் உயிரிழந்திருக்க மாட்டாரே என உறவினர்கள் கண்ணீர் விட்டனர்.

முருகேசனின் உறவினர்கள்

முருகேசனின் உறவினர்கள்

மேலும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது பொய்வழக்கு போட்டு நடவடிக்கை எடுத்த உதவி காவல் ஆய்வாளர் ஜம்புலிங்கம் மீதும், சரண்யாவை அழைத்து சென்ற மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் மீதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் முருகேசனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+