நாகை டூ இலங்கை.. பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு? எவ்வளவு நேரம் ஆகும்?
நாகை: தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவையை இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணிகள் கப்பல் சேவையை தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை இணைந்து தொடங்க திட்டமிட்டன. மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினத்தில் பயணியர் முனையம் அமைப்பது, துறைமுக கால்வாயை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல், செரியாபாணி என்ற கப்பல் கேரள மாநிலம் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த வாரம் சனிக்கிழமை நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், 10 ஆம் தேதி பயணிகளுக்காக கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அன்று கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 12 ஆம் தேதி முதல் கப்பல் பயணம் தொடங்கப்படுவதாக இருந்தது.
சேவை தொடங்கியது: ஆனால் நிர்வாக காரணங்களுக்காக கப்பல் சேவை தொடங்கும் நாள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி பிரதமர் மோடி இன்று காலை 8.15 மணியளவில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவையை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
கட்டணம் எவ்வளவு?: முன்னதாக பிரதமர் மோடி காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். இந்த கப்பல் சேவை துவங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ வேலு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கப்பலில் பயணிக்க பயணி ஒவருக்கு ரூ.7,670 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க நாளையொட்டி இன்று ஒருநாள் மட்டும் ரூ.3000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புறப்படும் நேரம்: நாள்தோறும் காலை 7 மணிக்கு புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு 12 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு நாகை வந்தடையும். பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடைமைகளைக் கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ விசா கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications