ஆளுநர் ஆர்என் ரவியின் படத்துக்கு செருப்பு மாலை.. அவமதித்தவர் மீது வழக்கு.. பாஜகவினர் மீதும் ‛கேஸ்’
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செருப்பு மாலை அணிவித்தவர் மற்றும் போராட்டம் நடத்திய பாஜகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. திராவிடம் குறித்து விமர்சனம் செய்யும் ஆர்என் ரவி, சனாதன தர்மம் பற்றி பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். மேலும் தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசேதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்என் ரவி காலம் தாழ்த்துவதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த விஷயங்களில் தான் தான் ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. சமீபத்தில் கூட ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்என் ரவி அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் சேலம் மாவட்டம் பஸ் நிலையத்தில் ஆளுநர் ஆர்என் ரவியின் படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பாஜகவினர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் ஆர்என் ரவியை அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவியின் படத்தை அவமதித்ததாக கூறி கலீல் ரஹ்மான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவத்தை கண்டித்து போராட்டம் செய்த பாஜகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி பாஜகவினர் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications