சென்னை ஐ.ஐ.டி.யில் பயங்கர தீ.. ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் எரிந்து சாம்பல்
சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவன கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள நிர்வாக கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இயங்கி வரும் ஐ.ஐ.டி. கல்வி நிறுவன கட்டிடத்தில் திடீரென நேற்றிரவு 10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. 4 மாடிகள் கொண்ட ஐ.சி.& எஸ்.ஆர் அலுவலக கட்டிடத்தின் 3வது தளம் தீயில் பற்றி எரிந்தது. இதில் அந்த கட்டிடத்தில் இருந்த ஆராய்ச்சி படிப்புக்கான ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி தகவல் அறிந்த தேனாம்பேட்டை, கிண்டி, ராஜ்பவன் மற்றும் சைதாப்பேட்டையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் ஐஐடி கல்லூரிக்கு விரைந்தன. ஐந்து வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் சில மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் இந்த தீ விபத்தில் ஊழியர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என ஐஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications