சென்னை டூ ராமேஸ்வரம் ரயிலில் திடீர் தீ... பயணிகள் தப்பினர்!
ராமேஸ்வரம்: சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் 2 மணி நேரம் தாமதமானது.
சென்னையிலிருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று சிவகங்கை அருகே 7 கி.மீட்டர் தொலைவில் வந்தபோது, அதன் எஸ் 2 பெட்டியில், ரயில் சக்கரத்தில் உராய்வினால் ஏற்பட்ட தீ பிடித்தது. இதையடுத்து ரயில் சிவகங்கையில் நிறுத்தப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயிலில் பயணம் செய்த சரவணன் என்பவர் கூறுகையில் சென்னையிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு ரயில் புறப்பட்டது. இன்று காலை ரயிலானது காரைக்குடி அருகே வரும் போது ரயில் பெட்டிகளில் எஸ் 2 கோச்சில் இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டியில் கீழ் உள்ள சக்கரத்தில் உராய்வினால் தீ பிடித்துள்ளது.

இந்த தீயானது கோச்சிலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் கூறிய பின்னர் அவர் ரயில்வே துறை காவலரிடம் கூறி சிவகங்கை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு தீயை அணைத்தனர். இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த திடீர் தீ விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications