சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் தீ விபத்து.. நோயாளிகள் பீதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஆதம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. 3 தளங்களைக் கொண்ட இந்த மருத்துவமனையில் திடீர் என்று இன்று தீவிபத்து ஏற்பட்டது.

Fire breaks out in Pvt hospital in Chennai, no injuries reported

இதனால் பதறி அடித்துக் கொண்டு நோயாளிகள் வெளியே ஓடிவந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் உள்ள முதல் தளத்தில் 10 படுக்கைகள் கொண்ட வார்ட்டில் ஒரு படுக்கை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

தீ முற்றிலும் அணைக்கப்பட்டப் பின்னர் நோயாளி நிம்மதி பெருமூச்சி விட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire broke out in private hospital in Chennai, no injuries reported.
Please Wait while comments are loading...