காவிரிப் பிரச்சினை: முதல்ல என்கிட்ட பேசி ஜெயிங்க... ஜெ.வுக்கு துரைமுருகன் பகிரங்க சவால்
வேலூர்: காவிரி விவகாரத்தில் முதலில் முதல்வர் ஜெயலலிதா என்னுடன் விவாதம் செய்து வெற்றி பெற்றால், அடுத்து தலைவர் கருணாநிதியுடன் விவாதம் செய்யலாம் என முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரத்தில், ‘காவிரி விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டார். இதை நான் ஆதாரபூர்வமாக சொல்கின்றேன். முடிந்தால், என்னுடன் இது தொடர்பாக சட்டசபையில் திமுக கருணாநிதி விவாதம் செய்யலாம். அதற்கு நான் தாயார், கருணாநிதி தயாரா?' என முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்து இருந்தார்.
தற்போது அதற்கு பதிலடி தரும் வகையில், திமுக முன்னாள் அமைச்சர் துரைமுகன் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும் இடத்தில் எல்லாம் முதல்வர் ஜெயலலிதா-வுக்கு பகிரங்க சாவல் விடுத்து வருகின்றார்.
இது தொடர்பாக துரைமுருகன் கூறியதாவது :-

அதிமுக தான் காரணம்...
காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் செய்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டுவது தவறு. காவிரி நீர் கிடைக்காமல் போனதற்கு அதிமுக தான் காரணம்.

என்னோடு வாதம் செய்யுங்கள்...
முதல்வர் ஜெயலலிதா தலைவர் கருணாநிதியை வாதம் செய்ய அழைத்துள்ளார். ஆனால் , முதல்வர் ஜெயலலிதா முதலில் என்னோடு வாதம் செய்யலாம்.

பொதுப்பணித் துணை அமைச்சர்...
அது தனக்கு கவுரக் குறைச்சல் என கருதினால், அவரது சட்ட சபையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சரை வாதம் செய்ய அனுப்பிவைக்கலாம்.

பேப்பர்கள் கூடாது...
ஆனால், அவர்கள் வாதம் செய்ய சட்ட சபையிலோ அல்லது மற்ற இடத்திலோ வரும் போது, கையில் பேப்பர்கள் கொண்டு வரக் கூடாது, குறிப்பாக சட்ட சபையில் அவர்கள் கட்சி உறுப்பினர்கள் இடைமறிக்க கூடாது.எங்கள் கட்சி உறுப்பினர்களும் அதே போல் நடந்து கொள்வார்கள்.

இடத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்...
எனவே, வாதம், விவாதத்தை எப்போது, எங்கு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்ய வேண்டியது முதல்வர் ஜெயலலிதா தான்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விரல் நுனியில் காவிரியை வைத்துள்ள துரைமுருகன்
பொதுப் பணித்துறை அமைச்சராக பல காலம் பணியாற்றியவர் துரைமுருகன். காவிரிப் பிரச்சினை முதல் பாலாறு, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட தமிழகத்தின் நதி நீர்ப் பிரச்சினைகள் குறித்த முழு விவரத்தையும், புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைததிருப்பவர் துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications