மீன்பிடி தடைக்காலம் எதிரொலி.. மீன்கள் விலை கிடுகிடு உயர்வு.. அசைவ பிரியர்கள் அதிர்ச்சி!
மீன்பிடி தடைக்காலத்தால் நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் நெல்லை மாவட்டத்தில் மீன்கள் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் குளத்தூர் அடுத்துள்ள தருவைகுளத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டு படகுகள் உள்ளன. இதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் மீன்படித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்கள் வரத்து குறைந்துள்ளது.
நாட்டு படகில் பிடித்து வரும் மீன்களே தற்போது மார்க்கெட்டுக்கு வருகிறது. இதில் கருப்பு களிங்கன், பச்சை களிங்கன் போன்ற முதல் வகை மீன்கள், கலப்பு மீன்கள் என்று குறைந்த அளவே மீன்கள் வரத்து உள்ளது. இதில் ஊளி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. கடந்த வாரம் ரூ.150க்கு விற்பனையான முறல் வகை மீன்கள் ரூ.250 வரை தற்போது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மீன்பிடி தடைக்காலம் முடியும் வரை மீன்கள் விலை குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். இந்த விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications