போலீசைக் கண்டித்து மீனவர்கள் மறியல்... ஈசிஆரில் போக்குவரத்து தேக்கம்
சென்னை கானாத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை கானாத்தூரிஙல போலீசாரைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். பெண்கள், தாய்மார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மெரினாவில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் அருகே மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். மீனவர்களின் இந்தப் போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பல இடங்களில் பதற்றம் நிலவுவத குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications