தமிழக மீனவர்கள் விடுதலைக்குக் காரணம் மோடியும், சுஷ்மாவும்தான்: தமிழிசை
சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப் பட்ட 5 தமிழக மீனவர்களை இலங்கை விடுதலை செய்ததற்கு முக்கியக் காரணம் பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் தான் என பாராட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்.
கடந்த 2011ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தியதாக 5 தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்தது. சமீபத்தில் அவர்களுக்கு தூக்குதண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தீர்ப்பிற்கு எதிராக தமிழகத்தில் கண்டனங்கள் எழுந்தன. இது தொடர்பாக பிரதமர் மோடியும், ராஜபக்சேவிடம் பேசினார். அதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு தூக்கை ரத்து செய்து பொதுமன்னிப்பு வழங்கியது இலங்கை.
இந்நிலையில், நேற்று அந்த மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. தமிழக மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அப்போது தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு உறுதியுடன் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள னர். பிரதமர் நரேந்திர மோடி யும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் மேற்கொண்ட முயற்சிகள்தான் மீனவர்கள் விடு விப்புக்கு முக்கிய காரணமாகும். இதன் மூலம் மோடியின் அரசு மக்கள் நலனைப் பாதுகாக்கும் அரசு என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசின் உண்மையான முயற்சிகளை விமர்சித்தவர்கள், இப்போது அரசின் நல்லெண்ணத்தை புரிந்துகொள்வார்கள். மேலும் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிற காலமும் வெகு தொலைவில் இல்லை என இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித் துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications