For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிரம்பியது பெருஞ்சாணி அணை; குமரியில் வெள்ள எச்சரிக்கை -24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பெருஞ்சாணி அணை நிரம்பிவிட்டதால், அணையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதால் கனமழை நீடித்து வருகிறது.

Flood alert for places near Perunchani dam

இதனால் பெருஞ்சாணி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதோடு, பரளியாறு, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே இலங்கை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது குமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

English summary
Many parts of Kanyakumari district experienced rain for the tenth consecutive day on Sunday. Public Works Department has issued a flood alert for those people living downstream of Perunchani dam as the water level full capacity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X