குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் வெள்ளம்- தனியார் வானிலை ஆய்வாளர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாலை 5 மணி முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Floods had been caused by heavy showers in the shortest time: Rajesh, a private meteorologist

சாலைகளில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் ஓடுவதால் வாகனம் ஊர்ந்து செல்கின்றன. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இவ்வளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையில் இன்னும் 3 அல்லது 4 மணிநேரம் மழை நீடிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கணிப்பையும் தாண்டி மழை பெய்துள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajesh, a private meteorologist, said the floods had been caused by heavy showers in the shortest time. This rain will continue in chennai for next 4 hours.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற