ஜெயலலிதா மர்ம மரணம்.. ஓபிஎஸ்ஸையும் விசாரிக்க வேண்டிய காலம் வரும்.. பொன்முடி எச்சரிக்கை !
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ஓபிஎஸ்ஸையும் விசாரிக்க வேண்டிய நிலை வரும் என்று பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகரில் மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதல்வராக இருந்தபோது விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்? சேகர் ரெட்டியுடன் உள்ள தொடர்பு என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கணைகளை தொடுத்திருந்தார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலினைப் பார்த்து கோடை வெயிலின் உச்சத்தில் பேசுகிறார் என அநாகரிகமாக பேசியுள்ளார். அரசியலில் நாகரிகமாக கருத்துப் பரிமாற்றம் செய்ய திமுக முயற்சித்தாலும் ஓபிஎஸ் போன்றவர்களால் இப்படித்தான் பேசுவார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
விவாதங்களில் அரசியல் நாகரிகத்துக்கும், அவர் வளர்ந்த அரசியலுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார். ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாததன் மூலம் அதிமுகவின் டிடிவி தினகரன் அணியும், ஓபிஎஸ் அணியும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தார்கள் என்பது உண்மையாகியுள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருக்கலாம். அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பீதி ஏற்பட்டிருக்கலாம். ஆர்.கே.நகரில் தோற்றால் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இதனால்தான் ஸ்டாலினைப் பற்றி அநாகரிமாக பேசியுள்ளார்.
தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இரு முறை நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸே காரணம். தமிழகத்தின் கடன் சுமையை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக உயர்த்தியதுதான் அவரது சாதனை.
மோசமான நிதி மேலாண்மை, நிர்வாகச் சீர்கேடுகள், சேகர் ரெட்டி விவகாரம் ஆகியவற்றுக்கு விசாரணை ஆணையத்தை ஓபிஎஸ் சந்தித்தே தீர வேண்டும். விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையப் போகிறது. அப்போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ஓபிஎஸ்ஸையும் விசாரிக்க வேண்டிய நிலை வரும்.
திமுக ஆட்சியில் அமைக்கப்படவுள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக டிடிவி தினகரன் அணியும், ஓபிஎஸ் அணியும் ஆஜராக தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications