நீதித்துறையை சுத்தப்படுத்தும் நேரம் வந்து விட்டது.. முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ

சென்னை : அண்மைக்காலமாகவே உச்சநீதிமன்றம் சரிவர செயல்படவில்லை என்று பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்,இந்நிலையில் நீதிபதிகள் 4 பேர் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகள் நீதித்துறையை துப்புரவு படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதை சுட்டிக் காட்டுவதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் சரியாக செயல்படவில்லை, இப்படியே போனால் ஜனநாயகம் கேள்விக் குறியாகிவிடும். தலைமை நீதிபதியை மாற்றுவது குறித்து நாடு தான் முடிவு செய்யும் என்றும் நாங்கள் எங்கள் பிரச்னை குறித்து முறையிட்டு பலன் இல்லாத நிலையில் தான் மக்களை நாடுகிறோம் என்று டெல்லியில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் கொட்டீத் தீர்த்த வேதனைகள் நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதங்களை வித்திட்டுள்ளது.

Former Justice vallinayagam says its time to sanitate the Judiciary system

நீதிபதிகளின் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம், உச்சநீதிமன்றம் சரியாக செயல்படவில்லை என்று கடந்த சில மாதங்களாகவே குற்றம்சாட்டப்படுகின்றன. நாங்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் எல்லாம் இந்த பாரபட்சம் எல்லாம் கிடையாது. 2001ம் ஆண்டில் நான் ஓய்வு பெற்றுவிட்டேன், எனினும் பலர் தற்போது உச்சநீதிமன்ற செயல்பாடுகளை சரியில்லை என்று சொல்வதை கேட்க முடிகிறது.
நீதித்துறையை துப்புரவுபடுத்தும் நேரம் வந்துவிட்டதையே நீதிபதிகளின் குற்றச்சாட்டுகள் உணர்த்துகின்றன. தன்னாட்சி கொண்ட அமைப்புக்கு நீதிபதியை நீக்கும் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Justice vallinayagam says its time to sanitate the Judiciary system as nowadays many were not satisfied over SC activity and the rebel 4 judges prove it.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற