வேன், காலேஜ் பஸ், அரசு பஸ் அடுத்தடுத்து மோதி விபத்து.. 10 பேர் படுகாயம்.. பெருங்களத்தூரில் பரபரப்பு!
சென்னை: தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் விபத்து ஏற்பட்டது. அரசு பேருந்து, சுற்றுலா வேன், கல்லூரி பேருந்து ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தால் பெருங்களத்தூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சனி, ஞாயிறு, திங்கட்கிழமை சுதந்திர தினம் என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலையே சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கிளம்பினர். இதனையடுத்து தாம்பரம், பெருங்களத்தூர் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா தலங்கள், சொந்த ஊருக்கு சென்றவர்கள் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து ரயில்கள், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் சென்னை திரும்பினர். சாலை வழியாக சென்னை திரும்பியவர்களுக்கு பெருங்களத்தூர் இடையே கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
காலை 6 மணி முதலே சென்னை பெருங்களத்தூர் தாம்பரம் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நத்தை போல நகர்ந்தன. அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் தாமதமாக வருவதால் நகருக்குள் போலீசார் அனுமதிப்பதில்லை என்று கூறி தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் இறக்கிவிடப்படுவதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
நடுவழியில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதை அடுத்து குழந்தைகள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகினர். புறநகர் பகுதிகளில் பயணிகள் இறக்கிவிடப்படுவதால் அங்கிருந்து வீட்டுக்கு செல்ல ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்கும் நிலை ஏற்பட்டதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனிடையே சென்னை - பெருங்களத்தூர் இடையே முன்னால் சென்ற அரசு பேருந்து திடீரென நின்றதால் அதன் பின்னால் வந்த சுற்றுலா வேன், தனியார் பேருந்து என மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கின. இதில் வேனில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பியவர்கள் 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications