டேங்க்கிலிருந்து ஒழுகிய எரிபொருள் - சென்னை டூ திருச்சி விமானம் கிளம்புவதில் 2 மணி நேர தாமதம்

துபாயிலிருந்து சென்னை மார்க்கமாக திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர் விமானத்தில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது விமானத்தின் ஒரு வால்வுப் பகுதியில் ஏற்பட்டிருந்த பழுது காரணமாக எரிபொருள் கசிவு ஏற்பட்டு தரையில் கொட்டியது.
இதையடுத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விமானத்திலிருந்த பயணிகள் பத்திரமாக விமான நிலையத்தினுள் தங்க வைக்கப்பட்டனர்.
பின்னர், விமானத்தின் வால்வில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 150 லிட்டர் அளவுள்ள விமான எரிபொருள் தரையில் கொட்டியுள்ளது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் நடைபெறவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்குள்ளாக விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் சாலை மார்க்கமாக தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பின்னர் மீதமிருந்த பயணிகளுடன், பழுது சரி செய்யப்பட்ட விமானம் இரண்டரை மணி நேரம் தாமதமாக நேற்று மாலை 5 மணி அளவில் திருச்சி புறப்பட்டுச் சென்றது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications