மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் வரவாய்ப்பில்லை... தமிழருவி மணியன்
சென்னை: வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜிகே வாசன் ஆகியோர் இடம்பெற வாய்ப்பில்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழருவி மணியன் கூறியுள்ளதாவது:
சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் காந்திய மக்கள் இயக்கம் வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. எஞ்சிய 209 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்போம்.

மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக, தமாகா இடம்பெறாது. அதிமுக, திமுகவின் செயல்பாடுகள் சரியானதாக இல்லை
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக காந்திய மக்கள் இயக்கம், 2 இடதுசாரி கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி என 6 கட்சிகளைக் கொண்ட மக்கள் நல கூட்டியக்கத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழருவி மணியன். பின்னர் அவரே முதல் நபராக மக்கள் நல கூட்டியக்கத்தை விட்டு வெளியேறினார்.
இந்த கூட்டியக்கம், தேர்தலுக்கான கூட்டணியாக உருவெடுத்த நிலையில் மனித நேய மக்கள் கட்சியும் இதனை விட்டு வெளியேறியது. தற்போது 4 கட்சி கூட்டணியாக சுருங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தலில் 209 தொகுதிகளில் மீண்டும் மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கப் போவதாக தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications