For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிஜா வைத்தியநாதன் யார் தெரியுமா... முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரின் மகள்!

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுகளில் பதவி இழந்துள்ள ராம் மோகன் ராவுக்குப் பிறகு, புதிய தலைமைச் செயலாளராக பதவிக்கு வந்துள்ள கிரிஜா வைத்தியநாதன் குறித்த செய்திகள்தான் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.

வார்தா புயல் சேதம், ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு போன்ற பரபரப்புகளை ஓரம் கட்டுமளவுக்கு, 'கிரிஜா வைத்தியநாதன் யார் தெரியுமோ?' என்ற கேள்விதான் எங்கு பார்த்தாலும்.

Girija Vaidhiyanathan, daughter of Reserve Bank's former governor

நடிகர் எஸ்வீ சேகரோட தம்பி மனைவிதான் கிரிஜா என பலர் சமூக வலைத்தளங்களில் போட்டோவுடன் செய்திகளைப் பகிர்ந்து வரும் நிலையில், கிரிஜாவின் பின்னணி குறித்த புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிட்டரமணனை நினைவிருக்கிறதா? 1990லிருந்து 92வரை ஆளுநராகப் பதவி வகித்தவர். அவரது மகள்தான் இந்த கிரிஜா. கிரிஜாவின் கணவர் பெயர் ராஜா வைத்தியநாதன். இவர் எஸ் வீ சேகருக்கு உடன் பிறந்த சகோதரர். மூத்தவர். அந்த வகையில் எஸ்வீ சேகரின் சொந்த அண்ணிதான் கிரிஜா.

கிரிஜா தலைமைச் செயலாளராக்கப்பட்டதில் சிபாரிசு அரசியல் ஏதுமில்லை என்கிறார்கள். தனது சொந்தத் தகுதி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே அவர் பதவிக்கு வந்திருக்கிறார்.

கிரிஜா வைத்தியநாதன் பெயர் லஞ்சம் ஊழலில் இதுவரை அடிபட்டதில்லை. ஹெல்த் எகனாமிக்ஸில் டாக்டர் பட்டம் பெற்றவர் கிரிஜா. தனது கல்வி மற்றும் அனுபவத்தை வைத்து கடந்த ஆட்சிக் காலங்களில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தவர் கிரிஜா.

English summary
Girija Vaidhiyanathan is daughter of Reserve Bank's former governor S Venkittaramanan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X