Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர் – காதலனுடன் எஸ்கேப் ஆன மகள்!

Subscribe to Oneindia Tamil

அணைக்கட்டு: அணைக்கட்டுக்கு அருகில் பெண் ஒருவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்த காரணத்தினால் வீட்டை விட்டு ஓடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அணைக்கட்டு கிராமத்தை அடுத்த மூலைகேட் புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஆர்த்தி .

இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

திருமண செய்ய முடிவு:

ஆர்த்திக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் படலத்தை தொடங்கினர். நேற்று மாப்பிள்ளை வீட்டார் ஆர்த்தியை பெண் பார்க்க வருவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் ராஜேந்திரன் ஈடுபட்டு இருந்தார்.

கடைவீதிக்கு சென்றவர்:

இது குறித்து அறிந்த ஆர்த்தி, நேற்று முன்தினம் மாலையில் அணைக்கட்டில் உள்ள கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஏதாவது அலங்கார பொருட்கள் வாங்க செல்கிறாள் என தாயார் நினைத்துக்கொண்டார்.

வீடு திரும்பாத ஆர்த்தி:

ஆனால் 2 மணி நேரம் ஆகியும் ஆர்த்தி வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகிவிட்டதால் ஆர்த்தியின் தாயாரும், தந்தை ராஜேந்திரனும் பதற்றம் அடைந்தனர். அருகில் உள்ள இடங்களிலும் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

பணம், நகையுடன் ஓட்டம்:

அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் வீட்டில் பார்த்தபோது திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 22 பவுன் நகை மற்றும் ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து அவர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

வாலிபருடன் மாயம்:

போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆர்த்தி, அதே ஊரைச்சேர்ந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதை பார்த்ததாக அந்த பகுதியினர் கூறினர்.

காதலால் வினை:

மேலும் விசாரித்தபோது ஆர்த்தியும் அந்த வாலிபரும் கடந்த ஒரு வருடத்திற்கு மேல் காதலித்து வந்தது தெரிய வந்தது. அதன்பேரில் நகை, பணத்துடன் ஓடிச்சென்ற ஆர்த்தியையும் அவருடன் சென்றதாக கூறப்படும் நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+