நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்திய மாணவி… கத்தியால் குத்திய கொடூரன்
மானாமதுரை: நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை தள்ளிப்போட்ட ஆத்திரத்தில் பிளஸ் 2 மாணவியான மணமகளை, 17 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்திய மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர். கத்திக்குத்துப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு ஆளான மாணவியின் பெயர் நந்தினி என்பதாகும். இவர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், மானாமதுரை அருகே உள்ள சோமாத்துார் கிராமத்தை சேரந்த சந்திரசேகர் என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யபட்டது. ஆனால், படிப்பை முடிக்காமல் தான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நந்தினி தனது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து நந்தினிக்கும், சந்திரசேகருக்கும் நடக்க இருந்த திருமணம் திடீரென நிறுத்தப்பட்டது.

திருமண கனவில் இருந்த மணமகன் சந்திரசேகருக்கு, திருமணம் நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மணமகன் சந்திரசேகர், மணமகள் நந்தினி மீது ஆத்திரம் அடைந்தார். வழக்கம்போல் புதன்கிழமையன்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக நந்தினி, தனது சைக்கிளை எடுக்க மானாமதுரை காந்தி சிலை அருகே வந்திருக்கிறார்.
நந்தினிக்காக அங்கு காத்திருந்த சந்திரசேகர், திருமணம் செய்து கொண்டு படிக்கும்படி நந்தினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஆனால் நந்தினி அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், தான் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக நந்தினியை குத்தினார்.
சந்திரசேகர் குத்தியதில் நந்தினிக்கு 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது. உடனே சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்களும், சாலை பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரும் ஓடி வந்து நந்தினியை மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை முடிந்த நிலையில் நந்தினி, தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நந்தினியை குத்திவிட்டு தப்பி ஓடிய சந்திரசேகரை பொதுமக்களும், போலீசாரும் விரட்டி சென்று பிடித்தனர். கைது செய்யப்பட்ட சந்திரசேகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications