காந்திய மக்கள் இயக்கத்தின் 18 வேட்பாளர்கள்: ஜூலை 17ல் திருப்பூரில் அறிமுகம்
சென்னை: தமிழகத்தில் மற்ற கட்சிகள் மீதுள்ள வெறுப்பினால், சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார். திருப்பூரில் வரும் 17ம் தேதி சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான பணிகளில் அந்த இயக்கத் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைக்கு 2016ல் நடக்கும் பொதுத் தேர்தலில் 30 தொகுதிகளில் காந்திய மக்கள் இயக்கம் தனித்துப் போட்டியிடும் என்று கூறியுள்ள தமிழருவி மணியன். முதல்கட்டமாக சனிக்கிழமையன்று 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மாவட்டத்துக்கு ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளோம். முதல்கட்டமாக இந்தப் பொதுக்கூட்டத்தில், 18 வேட்பாளர்களை அறிவிப்பதாக கூறினார்.

உறுதிமொழி ஏற்பு
இந்த 18 பேரும் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி அவரது சிலைக்கு முன்பாக ‘மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் அமைப்போம், பொது வாழ்வில் தூய்மையாக இருப்போம்' என உறுதிமொழி ஏற்பர்.

திருப்பூரில் அறிமுகம்
திருப்பூரில் வரும் 17ம் தேதி சட்டமன்ற வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான பணிகளில் அந்த இயக்கத் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழலற்ற நிர்வாகம்
எங்களிடம் பணம் இல்லை. மக்களை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறோம். புழுத்துப்போன அரசியலை புனிதப்படுத்த இருக்கிறோம். ‘ஊழலற்ற நிர்வாகம், மதுவற்ற மாநிலம்' என்கிற கொள்கையை முன்னெடுக்க உள்ளோம்.

கட்சிகள் மீது வெறுப்பு
தமிழகத்தில், மற்ற கட்சிகள் மீதான வெறுப்பில்தான் நாங்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்குகிறோம். எங்கள் வேட்பாளர்கள், தமிழகத்தில் ஒரு முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராக உருவெடுப்பர். இனி யாருக்கும் இரவல் குரல் கொடுக்க மாட்டோம்.

பதவிமோகமில்லை
அதேசமயம் இன்னொரு கட்சியின் தோளில் அமர்ந்து பயணிக்க மாட்டோம். எங்களுக்கு பதவி மோகம் கிடையாது. அரசியல் ஆதாயத்துக்காக நாங்கள் அரசியலுக்கு வரவில்லை.

கூட்டணி கிடையாது
காங்கிரஸ், பாஜக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கமாட்டோம். இவர்களிடமிருந்து, விலகி நிற்போம். இம்முறை, மாவட்டத்துக்கு ஒருவரை தேர்தலில் நிறுத்துகிறோம் என்று கூறியுள்ளார் தமிழருவி மணியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications