மாணவர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறப்பு எப்போது.. இதோ பாருங்க
சென்னை: செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்... இதற்கான சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதனால், தனியார் பள்ளி மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வை முடித்துவிட்டு கோடை விடுமுறையில் உள்ளனர்...
அரசு பொதுத் தேர்வை எழுதிய மாணவர்களும், ரிசல்ட்டுக்காக காத்துள்ளனர்.. இவர்கள் அனைவருமே கோடை விடுமுறையை கழிக்க, நிறைய பிளான்களை செய்து வருகிறார்கள்..

வெயில் தாக்கம்: இதற்காக போக்குவரத்து துறையும் பொதுமக்களின் வசதிக்காக ஏகப்பட்ட வசதிகளை செய்து வருகிறது. ஆனால், கல்லூரி மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதி கொண்டிருக்கிறார்கள்.. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பிறகு, எப்போது கல்லூரி திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்லூரி கல்வி இயக்குநர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள்: அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.. அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 19ம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பள்ளிகளைப் பொறுத்தவரை 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு நிறைவு பெற்றது.. இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லீவு லீவு: கோடை வெயில் காரணமாக மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படியான சூழல் ஏற்பட்டால் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.. எல்.கே.ஜி முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 2 ஆம் வாரம், வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications