முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்.. அசத்தல் அறிவிப்பு.. வெளியானது வழிகாட்டு நெறிமுறை.. மாஸ் ஸ்டாலின்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல் தொடர்பாக நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குழந்தைகள் கல்வி கற்று சமுதாயத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்க முக்கிய காரணமாக திகழ்ந்து வருவது மதிய உணவுத் திட்டம். இது தமிழ்நாட்டில் அன்று நீதிக்கட்சியின் ஆட்சி காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மதிய உணவுத் திட்டமானது, இப்போது நம் நாட்டின் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர்களாக இருந்த காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரால் இந்த மதிய உணவு திட்டம் பல்வேறு வகைகளில் தரம் உயர்த்தப்பட்டது..

பிறந்தநாள்: தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் அறிமுகம் செய்தார்... கடந்த 7.5.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், "1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்" என்று அறிவித்தார்.
அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும். 1545 அரகப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்க பள்ளி (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023-ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டிருந்தது. மேலும், 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது..
தயாரிப்பு உணவு : அதன்படி, காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும், நகரப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப்பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும். ஊரக பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், உள்ளூரில் சமைக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தபட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது. உணவு சமைக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும். காய்கறிகளின் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மேலும் சில நெறிமுறைகள் தரப்பட்டிருந்தன.

நெறிமுறைகள்: இந்நிலையில், 2023-2024ம் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் அதை எவ்வாறு விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மாணவர்கள் பசியின்றி பள்ளிகளுக்கு வருவதை உறுதி செய்ய வலியுறுத்தல். பள்ளி மாணவர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய வலியுறுத்தல். மாணவர்கள் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைப்பாட்டினை நீக்க குறிக்கோள். அனைத்து வகை தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1-5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications