வாகன ஓட்டிகளே ஹேப்பியா.. சென்னை மக்களுக்கு இதுதான் சூப்பர் செய்தி.. தரமான உத்தரவு போட்ட மாநகராட்சி
சென்னை : சென்னையில் புதிதாக சீரமைக்கப்படும் சாலைகளில் ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னையில் இப்போது எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, மெட்ரோ (குடிநீர்)பணிகள் காரணமாகவும், மழை நீர் வடிகால் பணிகள் காரணமாகவும் அதிக அளவில் தோண்டப்பட்டுள்ளன. சென்னை நகரமே பல இடங்களில் பள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை, மழை நீர் வடிகால், குடிநீர் பைப் லைன் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள், புதிதாக சீரமைக்கப்படும் சாலைகள் கூட இந்த வேலைகளால், வாகனங்கள் செல்லவே முடியாத நிலைக்கு மாறிவிடுகின்றன.
திடீரென தோண்டப்படும் பள்ளங்கள் குறித்து சரிவர தெரியாததால் விபத்தில் சிக்கும் அபாயமும் எழுகிறது. சாலைகளில் சென்னை நகர் முழுவதுமே மழைக்குள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதேபோல் சாலைகளில் குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் போன்றவை அடிக்கடி பள்ளம் தோண்டுவதால், இதனால் ஏற்படும் அசவுகரியம் பற்றி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான், சென்னையில் சீரமைக்கப்படும் சாலைகளில் ஒரு வருடத்திற்கு பள்ளம் தோண்டுவதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

சென்னையில் 58 பேருந்து தடங்கள் சாலைகளில் புதிதாக தார் போடப்பட்டு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ. 49.32 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. 16 சாலைகளில் இந்த பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. 1382 உள்சாலைகளை சீரமைக்க 137 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 26 சாலைகள் பேருந்துகள் செல்லும் சாலைகள் ஆகும்.
சீரமைக்கப்பட்ட சாலைகளில், மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் உள்ளிட்டவை பணி நிமித்தம் காரணமாக பள்ளம் தோண்டுவதாக ஏராளமான புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக தார் போடப்படும் சாலைகளில் அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த ஒரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பள்ளம் தோண்டக்கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications