"டாப் 1".. காஞ்சிபுரம் மக்களே குட் நியூஸ் வந்தாச்சு.. "2 இடம்".. தமிழக அரசே சொல்லிடுச்சே.. நிம்மதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு முக்கிய செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழ்நாடு அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கைக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
தமிழக போக்குவரத்துதுறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. அதிலும் மாவட்டவாரியாக, ஆய்வுசெய்து, பொதுமக்களின் நன்மை கருதி புது புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றுவெளியாகி இருந்தது.. காரணம், மகாபலிபுரம் பஸ் நிலையமானது, குறுகிய இடத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை, கழிப்பறை, குடிநீர், உடமைகள் பாதுகாப்பு அறை போன்ற வசதிகள் என இப்படி எதுவுமே இல்லாமல் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இத்தனைக்கும், உலகப்பாரம்பரிய நகரமாக "யுனஸ்கோ" அங்கிகாரம், சிற்ப புவிசார் நகரம், சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி நடந்துள்ள மாமல்லபுரத்தில் போதிய வசதி இல்லாமல் பஸ் நிலையம் இருந்து வருவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.
புது பஸ் ஸ்டாண்டு: மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது... பிறகு, 2010ம் ஆண்டு மறுபடியும் இதற்கான முயற்சி நடந்தது.. ஆனால், அதுவும் நடைபெறவில்லை. பிறகு, கருகாத்தம்மன் கோயில் வடபுறம் அரசுக்கு சொந்தமான 6.80 ஏக்கர் நிலத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்ட உறுதி செய்யப்பட்டு, 2019-ம் ஆண்டு பணிகள் தொடங்கியது... ஆனால், கொரோனா லாக்டவுன், தேர்தல், திட்ட மதிப்பீட்டில் குளறுபடி போன்ற காரணங்களினால், அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
மண் பரிசோதனை: 2020-ல் மண்ணை பரிசோதித்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை... இதற்கு பிறகு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.. இதற்கான ஆய்வும் கடந்த வருடமே நடத்தப்பட்டது.. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை கட்சி எம்எல்ஏ பாலாஜி, இந்த திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார்.

அதுபோலவே, இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.. காஞ்சிபுரம் மாநக ராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.. இதற்கான இடத்தையும் தேர்வு செய்ய வேலை நடந்து வருகிறது.. அத்துடன் அதற்கான இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
பூரிப்பு காஞ்சிபுரம்: பிறகு செய்தியாளர்களிடம் சொல்லும்போது, காரைப்பேட்டை மற்றும் சித்தேரிமேடு ஆகிய பகுதிகளில் உத்தேச பஸ் ஸ்டாண்டு அமைக்க தகுதியான இடத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை கலந்து ஆலோசித்து துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.. அமைச்சர்கூறிய இந்த நம்பிக்கை வார்த்தை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
அமைச்சரை தெரியும்னு யாராவது வந்தால் வெளிய துரத்துங்க.. ஜூலை 1 முதல் மாற்றம்.. ராஜ்மோகன் அதிரடி












Click it and Unblock the Notifications