ராமேஸ்வரம் அருகே அரசு பஸ் தீ வைத்து எரிப்பு.. கலவரக்காரர்கள் மீது வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் அரசு பஸ் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Government bus set fired near Rameshwaram

தங்கச்சிமடம் அருகே நேற்று இரவு சாலையோரம் நடந்து சென்றவரை மோதிய அரசு பஸ் நிற்காமல் சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில், அந்த நபர் உயிரிழந்தார். இதனால் கோபமடைந்த ஊர்மக்கள், அதன்பிறகு அந்த வழியாக வந்த ராமேஸ்வரம்-கம்பம் பஸ்சை கல்வீசி தாக்கினர். மற்றொரு பஸ்சை தீயிட்டு கொளுத்தினர். தகவல் அறிந்து போலீசார் குவிக்கப்பட்டனர். தடியடி நடத்தி மக்கள் விரட்டப்பட்டனர். 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ்.

ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா தலைமையில், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர். இதையடுத்து காலையில் இயல்பு நிலை திரும்பியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Government bus set fired near Rameshwaram and police filed case against 50 people.
Please Wait while comments are loading...