மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் மலைப்பாதையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

கோவை: மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் மலைப்பாதையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

அரசின் ஊதிய உயர்வு ஒப்புதலை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் தொமுச, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.

Government buses are being stopped at Mettupalayam on the Nilgiris highway

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி செல்லும் மலைப்பாதையில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மலைப்பாதையில் அரசுப்பேருந்துகளை அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இயக்கி வந்தனர்.

இந்நிலையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மலைப்பாதையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் வாகனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Government buses are being stopped at Mettupalayam on the Nilgiris highway. Trade unions are conducting strike against government.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற