ஓரெண்டு ரெண்டு.. ஜஸ்ட் 2 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி.. ஈரோடு அருகே!

2 மாணவர்களுடன் அரசு பள்ளி செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2 மாணவர்களுடன் செயல்படும் அரசுப் பள்ளி- வீடியோ

    ஈரோடு: இரண்டு மாணவர்களுடன் செயல்படும் துவக்க பள்ளியை மூடுவதாக வந்த தகவலையடுத்து, பள்ளியை மீண்டும் செயல்பட வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் செண்பகபுதூரில் ஊராட்சி மன்றத்திற்குட்பட்ட நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    நடுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும் இந்த பள்ளியில் இரண்டு மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.

    இரண்டு பேர் மட்டுமே

    இரண்டு பேர் மட்டுமே

    ஒரு மாணவி இரண்டாம் வகுப்பும் ஒரு மாணவர் நான்காம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு புதிதாக ஒரு மாணவர்கூட இந்த பள்ளியில் சேரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்தனர். அது படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 5 பேர் படித்த நிலையில் தற்போது மூன்று பேர் ஆறாம் வகுப்பு சென்று விட்டனர்.

    ஆங்கில வழி கல்வி இல்லை

    ஆங்கில வழி கல்வி இல்லை

    இதனால் மாணவர்களின் எண்ணிக்கை இரண்டாக குறைந்துள்ளது. இந்த இரண்டு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர்,ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு சமயலர் என மூன்று பேர் பணியில் உள்ளனர்.இந்த பள்ளியில் ஆங்கிலவழிக்கல்வி இல்லாததே மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    மூடுவதாக தகவல்

    மூடுவதாக தகவல்

    ஆங்கில வழிகல்வி கொண்டுவந்தால் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள தொட்டம்பாளையம்,சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தனியாக வாகனம் ஏற்பாடு செய்து சென்று வருகின்றனர்.

    கல்விதுறை அமைச்சரின் மாவட்டம்

    கல்விதுறை அமைச்சரின் மாவட்டம்

    தமிழகத்தில் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை தமிழக அரசு மூட நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் பள்ளிகல்விதுறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பள்ளி தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+